பளை இந்திராபுரம் மக்களின் தேவைகளை கேட்டறிந்தார் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள்.

பளை இந்திராபுரம் மக்களின் தேவைகளை கேட்டறிந்தார் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள்.

பச்சிலைப்பள்ளியின் மீள்குடியேற்ற கிராமமான இந்திராபுரம் மக்கள் எதிர்நோக்கும் வாழ்வியல் நெருக்கடிகள் தொடர்பாகவும், அவர்களின் தேவைகளை கேட்டறியும் நோக்கோடும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தலைமையிலான குழுவினர் கடந்த 01.10.2023 ஞாயிற்றுக் கிழமை அப்பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தனர்.

இந்த சந்திப்பில் மக்களின் அடிப்படை தேவைகளான வீட்டுத்திட்ட பிரச்சினை, மின்சார பிரச்சினை, போக்குவரத்து நெருக்கடிகள் மற்றும் ஏனைய தேவைகள் தொடர்பாக மக்கள் கூற கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் கட்டம் கட்டமாக பிரச்சினைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினருடன் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் மேனாள் உப தவிசாளர் கஜன் கட்சியின் செயற்பாட்டாளர் நாதன் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

சிறப்புச் செய்திகள்