பச்சிலைப்பள்ளி பிரதேச சபை முன்பள்ளி மாணவர்களின் ‘செயற்பட்டு மகிழ்வோம்’ நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது!

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் முன்பள்ளி மாணவர்களுடைய வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.

​இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

​பளை நகர விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், வழக்கறிஞர் சுப்பிரமணியம் சுரேன், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம அலுவலர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிறப்புச் செய்திகள்