அமரர் சிவலோகநாதன் யோகேஸ்வரி அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவை முன்னிட்டு, புனிதம் அறக்கட்டளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட “ஊர் கூடி உண்டு மகிழ்வோம்” விளையாட்டுப் பெருவிழா அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வை முன்னிட்டு, கண்டாவளை முத்தமிழ் கலாமன்றமும், ஊர் கூடி உண்டு மகிழ்வோம் நிர்வாகமும், ரூபன் விளையாட்டுக் கழகமும் இணைந்து, புனிதம் அறக்கட்டளை நிறுவனத்தின் நிதி அனுசரணையில், கண்டாவளை மண்ணின் பெருமை தாங்கிய “மண்ணின் மகிமை” மாபெரும் இசை (இறுவட்டு} வெளியீட்டு நிகழ்வும் நடைபெற்றது.

கண்டாவளை ரூபன் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் விருந்தினர்களாகக் கரைச்சிப் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் திரு. அருணாசலம் வேழமாலிகிதன், கண்டாவளை பிரதேச செயலாளர் திரு. பிருந்தாகரன், IBC தமிழ் வானொலி மற்றும் றீச்சா குழுமத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. கந்தையா பாஸ்கரன், கரைச்சிப் பிரதேச சபையின் கௌரவ உப தவிசாளர் திரு. சிவகுமார், நிர்வாக உத்தியோகத்தர் திருமதி கவிதா செல்வராசா, மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு. எம். ஆர். மோகனதாஸ், நீர்ப்பாசனப் பொறியியலாளர் திரு. பிரகாஷ், கௌரவ உறுப்பினர் திரு ம. சோமசேகரம், கிராம அலுவலர்கள், அதிபர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
