Strengthening Kankesanthurai Port Vital for Jobs and Growth in Sri Lanka’s North!

Jaffna District Parliamentarian Sivagnanam Shritharan has called on President Anura Kumara Dissanayake to prioritize the rapid development of the Kankesanthurai (KKS) Port during his upcoming visit to India. In a statement shared on his official Facebook page and the social media platform X, the MP emphasized the urgent need to finalize the long-pending Memorandum of […]

தமிழரசுக் கட்சியின் எதிர்காலத்தை மக்கள் மன்றத்திடம் கையளிக்கிறேன் – சிறீதரன் எம்.பி பிரகடனம்….!!

இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், அதன் எதிர்காலத் தலைமைத்துவத்தையும் மக்கள் மன்றத்தின் முன் கையளித்து, தமிழ்த்தேசிய மே நாளன்று புரட்சிகர அரசியல் பயணமாக எனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வெளிப்படுத்தியுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 38 தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்போடும், ஆயிரக்கணக்கான பொதுமக்களின் பங்கேற்போடும் கிளிநொச்சியில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற தமிழ்த்தேசிய மே நாள் நிகழ்வுகளை ஒழுங்கமைத்து, அந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மே நாள் உரையில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது. கட்சியின் […]

எரிக் சொல்ஹெய்ம் யாழ்ப்பாணத்தில் சிறீதரன் எம்பியுடன் சந்திப்பு!

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் செய்த எரிக் சொல்ஹெய்ம் சிறீதரன் எம்பியை சந்தித்து சமகால அரசியல் பொருளாதார நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடினார்

அமரர்.பசுபதிப்பிள்ளை அவர்கள் கிளிநொச்சியின் அடையாளமான தனிப்பெருமனிதன்

கிளிநொச்சி மண்ணின் பேராளுமையாக இருந்து, எமது மாவட்ட மக்களின் மனங்களில் நீங்கா இடம்பெற்றிருந்த, ஓய்வுநிலை கிராம அலுவலரும், வடக்கு மாகாணசபையின் மேனாள் உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஆணிவேருமான அமரர்.சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை அவர்கள் தடம் மாறாத் தமிழ்த்தேசியவாதியாக இருஞவர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழ்த் தேசிய இனத்தின் தலைவரையும் ஆத்மார்த்தமாக நேசித்ததன் வெளிப்பாடாகவே அவரது பணிகள் இறுதிக்காலம் வரை ஒருசீராய் அமைந்திருந்தன என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கடந்த […]

திருவள்ளுவர் வித்தியாலயத்திற்கு குடிநீர் வசதி…!!

அடிப்படை உட்கட்டுமான வசதிகள் அற்ற நிலையில் இயங்கிவரும் கிளி/மலையாளபுரம் திருவள்ளுவர் ஆரம்பப் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர்க் கிணறும் அதனுடன் இணைந்த குடிநீர் வழங்கல் கட்டமைப்பும் இன்றையதினம் (23) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் மாணவர்களின் பயன்பாட்டுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இப்பாடசாலையில் நீண்டகாலமாக நிலவிவந்த குடிநீர்த்தேவையை நிவர்த்திசெய்யும் நோக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கோரிக்கைக்கு அமைவாக, நியூசிலாந்தில் வசிக்கும் அரியதாஸ் செல்வதாஸ் எனும் நன்கொடையாளரின் நிதிப்பங்களிப்பில், அவரது தாயாரான அமரர்.மேரிரெஜினா அரியதாஸ் ஞாபகார்த்தமாக இக் குடிநீர்க்கிணறு அமைக்கப்பட்டு இன்றையதினம் […]

வடக்கில் 9543 ஏக்கர் காணி படையினரால் அபகரிப்பு : விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை…!

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் முப்படைகள், பொலிசார் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில், பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாகத் திரட்ட முடிந்த தகவல்களைக் கொண்டு, தன்னால் தயாரிக்கப்பட்ட விவரண அறிக்கையை சபாபீடத்திற்;கு சமர்ப்பித்து இன்றையதினம் (18) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். […]

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக்கோரும் பரிந்துரைப்பு மனு ஐ.நா அலுவலகத்தில் கையளிப்பு..!!

இலங்கைத்தீவில் நீதித்துறை மீது அரச நிருவாகத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வகை நெருக்கீடுகள் காரணமாக, நாட்டைவிட்டு வெளியேறிச்சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட கௌரவ நீதிவான் வு.சரவணராஜா அவர்களுக்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்கக் கோரியும், நீதித்துறையினது சுயாதீனத்தைப் பாதுகாக்கக் கோரியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி) கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் , கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகளின் பங்கேற்போடு 2023.10.02 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றிருந்தது. இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் மாண்புமிகு […]

பளை இந்திராபுரம் மக்களின் தேவைகளை கேட்டறிந்தார் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள்.

பச்சிலைப்பள்ளியின் மீள்குடியேற்ற கிராமமான இந்திராபுரம் மக்கள் எதிர்நோக்கும் வாழ்வியல் நெருக்கடிகள் தொடர்பாகவும், அவர்களின் தேவைகளை கேட்டறியும் நோக்கோடும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தலைமையிலான குழுவினர் கடந்த 01.10.2023 ஞாயிற்றுக் கிழமை அப்பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தனர். இந்த சந்திப்பில் மக்களின் அடிப்படை தேவைகளான வீட்டுத்திட்ட பிரச்சினை, மின்சார பிரச்சினை, போக்குவரத்து நெருக்கடிகள் மற்றும் ஏனைய தேவைகள் தொடர்பாக மக்கள் கூற கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் கட்டம் கட்டமாக பிரச்சினைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை […]

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக்கோரி, கிளிநொச்சியில் கவனயீர்ப்பு !!!

இலங்கைத்தீவில் நீதித்துறை மீது அரச நிருவாகத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வகை நெருக்கீடுகள் காரணமாக, நாட்டைவிட்டு வெளியேறிச்சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட கௌரவ நீதிவான் வு.சரவணராஜா அவர்களுக்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்கக் கோரியும், நீதித்துறையினது சுயாதீனத்தைப் பாதுகாக்கக் கோரியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி) கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் இன்றையதினம் 2023.10.02 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் மாண்புமிகு அன்ரனியோ குட்ரெஸ் அவர்களுக்கு […]