பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் முன்பள்ளி மாணவர்களுடைய வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

பளை நகர விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், வழக்கறிஞர் சுப்பிரமணியம் சுரேன், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம அலுவலர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Post Views: 9