கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 பானைகளில் மாபெரும் பொங்கல் விழா!

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 பானைகளில் மாபெரும் பொங்கல் விழா கடந்த புதன்கிழமை(29) வித்தியாலய முன்றலில் சிறப்பாக நடைபெற்றது.

​இந்நிகழ்வில் நூற்றாண்டு விழாக் காணும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் மேனாள் அதிபரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

​பாடசாலை சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு, “வித்தியாலய அன்னையின்” முற்றத்தில் கலை மற்றும் கலாச்சார விழுமியங்களோடு சிறப்பாக நடைபெற்றது. இதன் போது 100 பொங்கல் பானைகளில் பொங்கலிடப்பட்டு; மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து பொங்கல் பண்டிகையைக் கோலாகலமாகச் சிறப்பித்தனர்.

​வித்தியாலயத்தின் முதல்வர் திருமதி இளவேந்தி நிர்மலராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. இராஜகோபால் உதயகுமார் அவர்களும், சிறப்பு அதிதிகளாக வித்தியாலயத்தின் மேனாள் அதிபர்களான திரு. நடராசா, திரு. யோகநாதன், திரு. அரசரட்ணம் பங்கயற்செல்வன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சிறப்புச் செய்திகள்