ஈழத்தமிழர்களின் அடையாள மனிதனை இழந்தோம்!
யாழ்.மண்ணின் பெரியவிளானில் பிறந்து, உலக அரங்கில் ஈழத்தமிழர்களுக்கான அடையாளத்தை ஆழப்பதித்த பெருமனிதன் திரு.நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து ஆழ்ந்த துயருற்றோம். பன்னாட்டு அறிஞர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்க் கல்வியாளராக, சர்வதேச விளையாட்டு வீரராக, சமூக செயற்பாட்டாளராக என பல்துறை விற்பன்னராக விளங்கிய அவரின் மறைவு ஈழத்தமிழர்களின் அடையாள மனிதர்களுள் ஒருவரது மறைவாக அமைந்துள்ளது என்றே நான் கருதுகிறேன். 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலும், மூன்று ஆசியப் போட்டிகளிலும் இலங்கைக்காக விளையாடிய பெருவீரராக அடையாளம் பெறும் இவர், […]