தேசத்தின் தந்தைக்கு புகழ் வணக்கம்..!

ஈழ விடுதலைப் போரின் அறத்தை ஏற்று, தன் இரு பிள்ளைகளை இந்த மண்ணுக்கு உவந்தளித்ததோடு, விடுதலை உணர்வை தன் நெஞ்சகத்திலும் சுமந்து தேசப்பணி ஆற்றிய நாட்டுப்பற்றாளர் அமரர்.நாகலிங்கம் பசுபதி ஐயாவுக்கு எமது புகழ் வணக்கங்கள். கனகாம்பிகை மண்ணின் அடையாள மனிதனான அவர்தம் ஆத்மா அமைதிபெற எனது பிரார்த்தனைகளும். சிவஞானம் சிறீதரன்.நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர்,யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்,கிளிநொச்சி