தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு.!
நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா அவர்கள், கட்சியின் பொதுச்செயலாளர் மருத்துவர்.ப.சத்தியலிங்கம் அவர்களிடம் தேர்தல் விஞ்ஞாபனத்தை கையளித்து, உத்தியோகபூர்வமாக அதனை வெளியீடு செய்து வைத்தார். யாழ்ப்பாணத்திலுள்ள கட்சித் தலைவரது இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், ம.ஆ.சுமந்திரன் மற்றும் வேட்பாளர் இம்மனுவல் ஆனல்ட் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்