மாலதி நினைவுநாள் கிளிநொச்சியில்…!
ஈழ விடுதலைப் போரின் முதற்பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி அவர்களின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் கிளிநொச்சியில் கடைப்பிடிக்கப்பட்டது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தர்மபுரம் வட்டாரக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வில், நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டு நினைவுரையாற்றியதோடு, கண்டாவளைப் பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட, பொருண்மியம் நலிந்த குடும்பங்களைச்சேர்ந்த இருநூறு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களையும் வழங்கிவைத்தார். நிகழ்வில், வடக்கு மாகாண சபையின் மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, கரைச்சிப் பிரதேச […]