இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் சந்திப்பு!
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உடனான சந்திப்பானது இன்றைய தினம் இடம்பெற்றது இதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 8 பேர் கொண்ட குழுவினர் பங்குபற்றி இருந்தார்கள். இக்கலந்துரையாடலில் குறிப்பாக எமது வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்தி, அதிகாரப்பகிர்வு சமகால அரசியல் நிலவரம் தொடர்பான பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. மேலதிக தகவல் தமிழ் எம்பிக்களை சந்தித்த ஜெய்சங்கர்! வெளியானது கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள்
தமிழரசுக் கட்சியின் எதிர்காலத்தை மக்கள் மன்றத்திடம் கையளிக்கிறேன் – சிறீதரன் எம்.பி பிரகடனம்….!!
இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், அதன் எதிர்காலத் தலைமைத்துவத்தையும் மக்கள் மன்றத்தின் முன் கையளித்து, தமிழ்த்தேசிய மே நாளன்று புரட்சிகர அரசியல் பயணமாக எனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வெளிப்படுத்தியுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 38 தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்போடும், ஆயிரக்கணக்கான பொதுமக்களின் பங்கேற்போடும் கிளிநொச்சியில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற தமிழ்த்தேசிய மே நாள் நிகழ்வுகளை ஒழுங்கமைத்து, அந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மே நாள் உரையில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது. கட்சியின் […]