கெளரவ. இராஜவரோதயம் சம்பந்தன் ஐயா அவர்களுக்கு கிளிநொச்சியில் அஞ்சலி நிகழ்வுகள்.

நேற்றைய தினம் மறைந்த, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான, கெளரவ. இராஜவரோதயம் சம்பந்தன் ஐயா அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள்,

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையான அறிவகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் தலைமையில் இன்று காலை நடைபெற்றதுடன், துயரின் வெளிப்பாடாக மாவட்டப் பணிமனை முன்றலில் கட்சிக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

சிறப்புச் செய்திகள்