திருவள்ளுவர் வித்தியாலயத்திற்கு குடிநீர் வசதி…!!

திருவள்ளுவர் வித்தியாலயத்திற்கு குடிநீர் வசதி…!!

அடிப்படை உட்கட்டுமான வசதிகள் அற்ற நிலையில் இயங்கிவரும் கிளி/மலையாளபுரம் திருவள்ளுவர் ஆரம்பப் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர்க் கிணறும் அதனுடன் இணைந்த குடிநீர் வழங்கல் கட்டமைப்பும் இன்றையதினம் (23) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் மாணவர்களின் பயன்பாட்டுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

இப்பாடசாலையில் நீண்டகாலமாக நிலவிவந்த குடிநீர்த்தேவையை நிவர்த்திசெய்யும் நோக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கோரிக்கைக்கு அமைவாக, நியூசிலாந்தில் வசிக்கும் அரியதாஸ் செல்வதாஸ் எனும் நன்கொடையாளரின் நிதிப்பங்களிப்பில், அவரது தாயாரான அமரர்.மேரிரெஜினா அரியதாஸ் ஞாபகார்த்தமாக இக் குடிநீர்க்கிணறு அமைக்கப்பட்டு இன்றையதினம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம், பாடசாலை அதிபரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, ஒலிபெருக்கி வசதியையும், சுற்று வேலி அமைக்கும் பணிகளையும் காலக்கிரமத்தில் மேற்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறப்புச் செய்திகள்