வடக்கில் 9543 ஏக்கர் காணி படையினரால் அபகரிப்பு : விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை…!

வடக்கில் 9543 ஏக்கர் காணி படையினரால் அபகரிப்பு : விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை…!

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் முப்படைகள், பொலிசார் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில், பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாகத் திரட்ட முடிந்த தகவல்களைக் கொண்டு, தன்னால் தயாரிக்கப்பட்ட விவரண அறிக்கையை சபாபீடத்திற்;கு சமர்ப்பித்து இன்றையதினம் (18) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 4378.8 ஏக்கரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 2433.79 ஏக்கரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 1578.27 ஏக்கரும், வவுனியா மாவட்டத்தில் 1021.55 ஏக்கரும், மன்னார் மாவட்டத்தில் 130.77 ஏக்கருமாக வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் 9543.18 ஏக்கர் காணிகள் படையினரால் அபகரிக்கப்பட்டுள்ளதாக அவரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பு : தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் திணைக்கள மட்டங்களிடம் கோரியதற்கமைய, கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டே இவ் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது, மேலதிக தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் தரவுகள் இற்றைப்படுத்தப்படும்.

சிறப்புச் செய்திகள்