கிளிநொச்சி விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான பாரம்பரிய கிளித்தட்டு போட்டி

தமிழரசின் ஏற்பாட்டில் கிளிநொச்சி நிர்வாக மாவட்ட எல்லைக்குள் உள்ள அனைத்து பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான பாரம்பரிய கிளித்தட்டு போட்டித்தொடர் 2024!

கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வருகின்ற பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையில் எதிர்வரும் ஆடிப்பிறப்பு தமிழரின் பாரம்பரிய திருநாளாகிய அன்று இறுதிப் போட்டிகள் நடைபெறக்கூடிய வகையில் ஆண் பெண் இருபாலருக்கும் இடையிலான கிளித்தட்டு போட்டிகள் நடைபெற மாவட்ட தமிழரசின் பாரம்பரிய விளையாட்டுகள் செயலணி ஏற்பாடு செய்துள்ளது.

தந்தை செல்வா வெற்றிக் கேடயம் மற்றும் பண பரிசில்களை பெற்றுக் கொள்ளும் வகையில் இப் போட்டிகள் நடைபெற உள்ளது தமிழ் மக்களின் பாரம்பரிய பண்பாட்டு விழாவாகிய ஆடிப்பிறப்பு அன்று எழுச்சிமிகு இறுதிப் போட்டிகளை கிளிநொச்சி நகரில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்காக இன்று 16 தொடக்கம் எதிர்வரும் 30/06/ 2024 உள்ள காலப்பகுதியில் பின்வரும் விளையாட்டுத் துறை இணைப்பாளர்களோடு தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை மற்றும் அறிவுறுத்தல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

ச.அலன்டீலன்:- 0776145084
அ.சிவகுமாரன்:- 0777224953

சிறப்புச் செய்திகள்