போராடினால் மட்டுமே இனம் வாழும்

இன்று காலை 30.05.2024 யாழ்ப்பாணம் சுழிபுரம், திருவடிநிலையில் பொதுமக்களின் காணிகளை கடற்படைக்கு சுவீகரிக்கும் முயற்சி கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கஜேந்திரன் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு போராடியதனால் அளவீட்டுப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது..
சிங்களத் தலைவர்களின் மேலாதிக்க மனோநிலை மாறப்போவதில்லை.

ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை அதிகாரபூர்வமாக வழங்குவதற்குரிய சந்தர்ப்பங்களை தமிழ்மக்கள், சிங்களத் தலைவர்களுக்கு பலமுறை வழங்கியிருந்தும் அவர்கள் அவற்றை சரிவரப் பயன்படுத்த முன்வராமைக்கு, இனமேலாதிக்க மனோநிலையே காரணம். அதற்கு ரணிலும் விதிவிலக்கல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (26) கெளதாரிமுனை மக்களைச் சந்தித்து சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்தும், அந்த மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்குக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் […]
சிறைக்கைதிகளைச் சந்தித்த யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்…!

கடந்த பெப்ரவரி மாதம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியும், போராளிகள் நலன்புரிச் சங்கத்துன் வவுனியா மாவட்டத் தலைவருமான செல்வநாயகம் ஆனந்தவர்ணன் (அரவிந்தன்) மற்றும் கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக நீதிமன்றில் முற்படுத்தப்படாமல் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் மூதூரைச் சேரந்த எஸ்.சுதாகரன் ஆகிய இருவரையும் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் இன்று கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர். இதன்போது தனது விடுதலையை வலியுறுத்தி கடந்த இரண்டு […]
ஈழத்தமிழர்களின் அடையாள மனிதனை இழந்தோம்!

யாழ்.மண்ணின் பெரியவிளானில் பிறந்து, உலக அரங்கில் ஈழத்தமிழர்களுக்கான அடையாளத்தை ஆழப்பதித்த பெருமனிதன் திரு.நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து ஆழ்ந்த துயருற்றோம். பன்னாட்டு அறிஞர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்க் கல்வியாளராக, சர்வதேச விளையாட்டு வீரராக, சமூக செயற்பாட்டாளராக என பல்துறை விற்பன்னராக விளங்கிய அவரின் மறைவு ஈழத்தமிழர்களின் அடையாள மனிதர்களுள் ஒருவரது மறைவாக அமைந்துள்ளது என்றே நான் கருதுகிறேன். 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலும், மூன்று ஆசியப் போட்டிகளிலும் இலங்கைக்காக விளையாடிய பெருவீரராக அடையாளம் பெறும் இவர், […]