சிறீதரன் எம்.பியின் ஏற்பாட்டில் பாடசாலைக்கு ஒலியமைப்புச் சாதனங்கள் கையளிப்பு!

யாழ்ப்பாணம், கரவெட்டி சரஸ்வதி வித்தியாலயத்திற்கான ஒலியமைப்புச் சாதனங்கள் வழங்கும் நிகழ்வு அண்மைய தினம் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது.

​கனடா, மொன்றியல் வாழ் தமிழ் தேசியத்திற்கான வேர்கள் அமையத்தின் நிதி அனுசரணையில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களினால் குறித்த ஒலியமைப்புச் சாதனங்கள்  வழங்கிவைக்கப்பட்டன.

​பாடசாலையின் முதல்வர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுடன், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திரு. சுரேந்திரன், வடமராட்சி கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளர் திரு.சத்தியபாலன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் வடமராட்சிக்கான இணைப்பாளர் திரு. அருண்குமார் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

சிறப்புச் செய்திகள்