யாழ்ப்பாண மாவட்டத்தின் வெள்ளப் பேரிடர்ப் பாதிப்பு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இன்றைய தினம் (30) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான உடனடி உதவிகளை வழங்கல், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மக்கள் இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
Post Views: 83