கிளிநொச்சி அரச அதிபரை சந்திப்பு.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு, இன்றையதினம் (01) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

குறிப்பாக, வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இடருதவிகளை வழங்குதல், இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்தல் உள்ளிட்ட அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டிருந்தது.

அதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் புனரமைக்கப்பட வேண்டியுள்ள உள்ளக வீதிகளை சீரமைத்தல் குறித்தும், அடுத்த ஆண்டுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

குறித்த சந்திப்பில், கரைச்சி பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளைச் செயலாளர் வீர்வாகு விஜயகுமார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறப்புச் செய்திகள்