May 14, 2026

​“நயம் பேசு” நூல் வெளியீடு…!

​எழுத்தாளரும் தமிழாசிரியருமான இரா. நிஷாந்தன் எழுதிய “நயம் பேசு” நூல் வெளியீட்டு நிகழ்வு அண்மையில் (09.05.2026) சிறப்பாக நடைபெற்றது.

​இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.

​கட்டுரைத் தொகுப்பாக வெளிவந்திருக்கும் “நயம் பேசு” நூலிற்கான அறிமுக உரையினை சர்வேஸ்வரன் வில்வரசன் அவர்களும், நூல் நயப்புரையினை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் வேல் நந்தகுமார் அவர்களும் வழங்கினர்.

​தத்துவக் கலாநிதி சிவஸ்ரீ அமிர்த ஸ்ரீகாந்தக் குருக்கள் தலைமையில், கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாகக் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் ‘செந்தமிழ்ச் சொல்லருவி’ சந்திரமௌலீசன் லலீசன் அவர்களும், கிளிநொச்சி மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் அமரசிங்கம் கேதீஸ்வரன் அவர்களும் பங்கேற்றனர்.