மாண்புமிகு சம்பந்தன் ஐயா அவர்களுக்கு இன்று கிளிநொச்சியில் வணக்க நிகழ்வு இடம்பெற்றது..
இன்று காலை 9 மணிக்கு டிப்போ சந்தியில் அமைக்கப்பட்டுள்ள விசேட பந்தலில் அவருடைய திருவுருவப் படம் வைக்கப்பட்டு மலர்மாலை அணிவித்து குறித்த அஞ்சலி நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது .
தொடர்ந்து மாண்புமிகு சம்பந்தன் ஐயா அவர்களது இறுதி நிகழ்வு கருமங்கள் நடைபெறும் வரையும் குறித்த பந்தலில் சோக இசை ஒலிபரப்பப்பட்டு தினமும் மக்கள் அஞ்சலி செலுத்தக்கூடிய வகையில் விசேட மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
Post Views: 406