April 1, 2026

சந்தனம் சண்முகராசாவின் (வாசு மாஸ்டர்) இறுதி சடங்கில் சிறீதரன் எம்.பி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது தாக்குதல் தளபதி லெப்டினன்ட் சீலன் (லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி) அவர்களின் மைத்துனரும், தமிழீழத் தேசியத் தலைவரின் மெய்ப்பாதுகாவலராகச் செயற்பட்டவருமான சந்தனம் சண்முகராசா (வாசு மாஸ்டர்) அவர்களின் இறுதிச்சடங்கு திருகோணமலை, ஆத்திமோட்டையில் நேற்றையதினம்(31) நடைபெற்றது.

​இதன்போது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்.