முக்கொம்பன் மண்ணுக்குப் பெருமை சேர்த்த இசைப்பிரியா: நேரில் சென்று வாழ்த்திய சிறீதரன் எம்.பி….!

​அண்மையில் வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றில், கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று கிளி/முக்கொம்பன் மகா வித்தியாலய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்த,  மாணவி விஜயரூபன் இசைப்பிரியா அவர்களுக்கு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நேரில் சென்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

​இதன்போது கிளி/முக்கொம்பன் மகா வித்தியாலய அதிபர் திரு.இராசரத்தினம் அரவிந்தன் அவர்களும்,  பூநகரிப் பிரதேச சபையின் கௌரவ உப தவிசாளர்( நல்லூர் வட்டாரம்) திருமதி குலவீரசிங்கம் குணலட்சுமி அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

சிறப்புச் செய்திகள்