தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலையே: அருட்தந்தை ஜீவந்த பீரிஸின் கருத்தை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்!

சகோதர இனத்தைச் சேர்ந்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் அவர்கள் கடந்த மே 18ஆம் தேதி கொழும்பிலே நடைபெற்ற மே 18 இன அழிப்பு நாளை மிக பகிரங்கமாக, இலங்கையிலே தமிழர்கள் மீது புரியப்பட்டது இனப்படுகொலை என்பதை வெளிப்படையாகக் கூறியிருந்தார். சிங்கள மக்களிடமிருந்து இவ்வாறான ஒரு கருத்து வெளிவருதல் என்பது மிக அருமை. அது மிகவும் ஆரோக்கியமான ஒரு கருத்தை அவர் சொல்லியிருக்கின்றார் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். […]