மாலதி நினைவுநாள் கிளிநொச்சியில்…!

ஈழ விடுதலைப் போரின் முதற்பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி அவர்களின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் கிளிநொச்சியில் கடைப்பிடிக்கப்பட்டது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தர்மபுரம் வட்டாரக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வில், நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டு நினைவுரையாற்றியதோடு, கண்டாவளைப் பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட, பொருண்மியம் நலிந்த குடும்பங்களைச்சேர்ந்த இருநூறு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களையும் வழங்கிவைத்தார். நிகழ்வில், வடக்கு மாகாண சபையின் மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, கரைச்சிப் பிரதேச […]

எம் மனங்களில் நிறைந்த சச்சி சேருக்கு புகழ் வணக்கம்..!

நெடுநாளைய நோயின் பிடியில் உருகிக் கரைந்த சச்சி சேரின் உயிர் பிரிந்த செய்தி, எமக்குத் தந்திருக்கும் துயரின் வலிமை தாங்கொணாதது. தாயக விடுதலைப் போராட்டத்தின் தார்மீகப் பங்காளனான அவரின் பணி, பின்வந்த நாட்களில் ஆசிரியத்துவத்தின் தளத்தில் ஆழப்பதியத் தொடங்கியது. அவரிடத்தே நிறைந்திருந்த ஆங்கில மொழிப்புலமையும், தகைமையும் அவரை ஓர் ஆங்கில ஆசானாக அடையாளம்பெறச் செய்திருந்தாலும், பல்துறை ஆற்றலின் பரிமாணங்கள் அவருள்ளிருந்ததை அவரை அறிந்தோர் நன்கறிவர். நேர்த்தியான உரையாடற் பாங்கு, அங்கதச் சுவை பொங்க பேசும் பாணி, அரசியல் […]

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் கிளிநொச்சியில்..!

ஈழத் தமிழர்களின் இயல்பு வாழ்வுக்கான ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, பன்னிரு தினங்கள் உண்ணாநோன்பிருந்து உயிர்துறந்த தியாகதீபம் லெப்.கேணல்.திலீபன் அவர்களின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்றையதினம் (26) கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது. இலங்கைத் தமிழரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், கட்சியின் கிளிநொச்சி மாவட்ட வாலிபர் முன்னணித் தலைவர் குணபாலசிங்கம் குணராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கரைச்சி பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் […]

கிளிநொச்சியில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்.!!

கறுப்பு ஜூலைப் படுகொலையின் 41வது ஆண்டு நினைவேந்தல், இலங்கைத் தமிழரசுக் கட்சி கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், கட்சியின் மாவட்டப் பணிமனையான அறிவகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. கரைச்சிப் பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில், தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாணசபையின் மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, எழுத்தாளரும் ஆசிரியருமான தீபச்செல்வன் ஆகியோர் நினைவுரைகளை ஆற்றியிருந்தனர். கட்சியின் செயல்நிலை […]

அமரர்.பசுபதிப்பிள்ளை அவர்கள் கிளிநொச்சியின் அடையாளமான தனிப்பெருமனிதன்

கிளிநொச்சி மண்ணின் பேராளுமையாக இருந்து, எமது மாவட்ட மக்களின் மனங்களில் நீங்கா இடம்பெற்றிருந்த, ஓய்வுநிலை கிராம அலுவலரும், வடக்கு மாகாணசபையின் மேனாள் உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஆணிவேருமான அமரர்.சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை அவர்கள் தடம் மாறாத் தமிழ்த்தேசியவாதியாக இருஞவர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழ்த் தேசிய இனத்தின் தலைவரையும் ஆத்மார்த்தமாக நேசித்ததன் வெளிப்பாடாகவே அவரது பணிகள் இறுதிக்காலம் வரை ஒருசீராய் அமைந்திருந்தன என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கடந்த […]

திருவள்ளுவர் வித்தியாலயத்திற்கு குடிநீர் வசதி…!!

அடிப்படை உட்கட்டுமான வசதிகள் அற்ற நிலையில் இயங்கிவரும் கிளி/மலையாளபுரம் திருவள்ளுவர் ஆரம்பப் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர்க் கிணறும் அதனுடன் இணைந்த குடிநீர் வழங்கல் கட்டமைப்பும் இன்றையதினம் (23) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் மாணவர்களின் பயன்பாட்டுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இப்பாடசாலையில் நீண்டகாலமாக நிலவிவந்த குடிநீர்த்தேவையை நிவர்த்திசெய்யும் நோக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கோரிக்கைக்கு அமைவாக, நியூசிலாந்தில் வசிக்கும் அரியதாஸ் செல்வதாஸ் எனும் நன்கொடையாளரின் நிதிப்பங்களிப்பில், அவரது தாயாரான அமரர்.மேரிரெஜினா அரியதாஸ் ஞாபகார்த்தமாக இக் குடிநீர்க்கிணறு அமைக்கப்பட்டு இன்றையதினம் […]

பளை இந்திராபுரம் மக்களின் தேவைகளை கேட்டறிந்தார் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள்.

பச்சிலைப்பள்ளியின் மீள்குடியேற்ற கிராமமான இந்திராபுரம் மக்கள் எதிர்நோக்கும் வாழ்வியல் நெருக்கடிகள் தொடர்பாகவும், அவர்களின் தேவைகளை கேட்டறியும் நோக்கோடும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தலைமையிலான குழுவினர் கடந்த 01.10.2023 ஞாயிற்றுக் கிழமை அப்பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தனர். இந்த சந்திப்பில் மக்களின் அடிப்படை தேவைகளான வீட்டுத்திட்ட பிரச்சினை, மின்சார பிரச்சினை, போக்குவரத்து நெருக்கடிகள் மற்றும் ஏனைய தேவைகள் தொடர்பாக மக்கள் கூற கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் கட்டம் கட்டமாக பிரச்சினைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை […]

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக்கோரி, கிளிநொச்சியில் கவனயீர்ப்பு !!!

இலங்கைத்தீவில் நீதித்துறை மீது அரச நிருவாகத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வகை நெருக்கீடுகள் காரணமாக, நாட்டைவிட்டு வெளியேறிச்சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட கௌரவ நீதிவான் வு.சரவணராஜா அவர்களுக்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்கக் கோரியும், நீதித்துறையினது சுயாதீனத்தைப் பாதுகாக்கக் கோரியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி) கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் இன்றையதினம் 2023.10.02 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் மாண்புமிகு அன்ரனியோ குட்ரெஸ் அவர்களுக்கு […]