கிளிநொச்சியில் வணக்க நிகழ்வு.

மாண்புமிகு சம்பந்தன் ஐயா அவர்களுக்கு இன்று கிளிநொச்சியில் வணக்க நிகழ்வு இடம்பெற்றது.. இன்று காலை 9 மணிக்கு டிப்போ சந்தியில் அமைக்கப்பட்டுள்ள விசேட பந்தலில் அவருடைய திருவுருவப் படம் வைக்கப்பட்டு மலர்மாலை அணிவித்து குறித்த அஞ்சலி நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது . தொடர்ந்து மாண்புமிகு சம்பந்தன் ஐயா அவர்களது இறுதி நிகழ்வு கருமங்கள் நடைபெறும் வரையும் குறித்த பந்தலில் சோக இசை ஒலிபரப்பப்பட்டு தினமும் மக்கள் அஞ்சலி செலுத்தக்கூடிய வகையில் விசேட மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

சம்பந்தன் ஐயாவின் சிறு வரலாறு.

சம்பந்தன் 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.[5] 1983ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தனர்.  இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் படி தனி நாடு கோருவதற்கு ஆதரவளிக்க முடியாது என நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்தமைக்காகவும், 1983 கறுப்பு சூலை நிகழ்வுகளில் மூவாயிரத்திற்கும் அதைகமான தமிழர்கள் சிங்களக் காடையர்களினால் படுகொலை செய்யப்பட்டதற்கும், அவர்களது உடைமைகள் சேதமாக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் அவர்கள் நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்தனர். மூன்று மாதங்கள் […]