பளை இந்திராபுரம் மக்களின் தேவைகளை கேட்டறிந்தார் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள்.

பச்சிலைப்பள்ளியின் மீள்குடியேற்ற கிராமமான இந்திராபுரம் மக்கள் எதிர்நோக்கும் வாழ்வியல் நெருக்கடிகள் தொடர்பாகவும், அவர்களின் தேவைகளை கேட்டறியும் நோக்கோடும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தலைமையிலான குழுவினர் கடந்த 01.10.2023 ஞாயிற்றுக் கிழமை அப்பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தனர். இந்த சந்திப்பில் மக்களின் அடிப்படை தேவைகளான வீட்டுத்திட்ட பிரச்சினை, மின்சார பிரச்சினை, போக்குவரத்து நெருக்கடிகள் மற்றும் ஏனைய தேவைகள் தொடர்பாக மக்கள் கூற கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் கட்டம் கட்டமாக பிரச்சினைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை […]
நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக்கோரி, கிளிநொச்சியில் கவனயீர்ப்பு !!!

இலங்கைத்தீவில் நீதித்துறை மீது அரச நிருவாகத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வகை நெருக்கீடுகள் காரணமாக, நாட்டைவிட்டு வெளியேறிச்சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட கௌரவ நீதிவான் வு.சரவணராஜா அவர்களுக்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்கக் கோரியும், நீதித்துறையினது சுயாதீனத்தைப் பாதுகாக்கக் கோரியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி) கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் இன்றையதினம் 2023.10.02 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் மாண்புமிகு அன்ரனியோ குட்ரெஸ் அவர்களுக்கு […]