வடக்கு கிழக்கிலே தமிழர்கள் இன்றும் அச்சுறுத்தலோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்..

விடுதலைப் புலிகளை மீளவும் உருவாக்குகின்றார்கள் என்கின்ற போர்வையில் கைது செய்வதும். தமிழ் இளைஞர் யுவதிகளையும் தொடர்ச்சியாக இலங்கையினுடைய புலனாய்வுத் துறையினர் விசாரணைகள் மேற்கொள்வதும் வடக்கு கிழக்கிலே தமிழர்கள் இன்றும் அச்சுறுத்தலோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு சிறந்த உதாரணம். ஆகவே தமிழர்கள் எதைச் செய்தாலும் எதை பேசினாலும் சிங்களவர்களுடைய பார்வையில் அது புலிகளைப் போன்றே காட்சியளிக்கின்றது. ஆகவே இவற்றிலிருந்து சிங்கள பேரினவாதிகள் விடுபட வேண்டுமாக இருந்தால் விடுதலைப்புலிகள் ஏன் தோற்றம் பெற்றார்கள் என்பதை சரியான முறையில் ஆய்வு […]

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய சிறீதரன்.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய சிறீதரன் எம்.பி, தாயகத்தில் செயல்வலுமிக்க பொருளாதார கட்டமைப்புகளை உருவாக்குதல், வடக்கு, கிழக்கில் நிலைபேறான முதலீடுகள் மூலம் இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவம் மற்றும் தற்போதைய அரசியல் பொருளாதார களச்சூழல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துரைத்திருந்தார்.

மறைந்த ‘மாமனிதர்” மருத்துவர்.ஜெயகுலராஜா

மறைந்த ‘மாமனிதர்” மருத்துவர்.ஜெயகுலராஜா அவர்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொடி போர்த்தி, புகழ் மரியாதை செலுத்தினார்

மாண்புறு மருத்துவருக்கு புகழ் வணக்கம்…!

ஈழ விடுதலைப் போரின் வீரவரலாற்றில் நிகழ்ந்தேறிய எண்ணிலடங்கா தியாகங்களுக்கும் அர்ப்பணிப்புகளுக்கும் அடையாளம் தந்த பலருள்ளும், தனிப்பெரும் ஆளுமையாய் களப்பணியாற்றிய மருத்துவப் போராளி Dr.ஜெயகுலராஜா மறைந்தார் என்ற செய்தி எங்கள் மனங்களெங்கும் துயரை நிறைத்திருக்கிறது. ஈழத்தமிழர்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராய், எங்கள் அறப்போர் முகிழ்ப்புப் பெற்றிருந்த காலத்தில் மருத்துவர்.ஜெயகுலராஜா அவர்கள் தன் மருத்துவத்தால் மாபெரும் மனிதநேயப் போராளியாக அடையாளம்பெறத் தொடங்கியிருந்தார். 1983 இல், சாவகச்சேரி பொலிஸ் நிலையம் மீதான தாக்குதலில் விழுப்புண் அடைந்த சீலன், குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட […]

சிறைக்கைதிகளைச் சந்தித்த யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்…!

கடந்த பெப்ரவரி மாதம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியும், போராளிகள் நலன்புரிச் சங்கத்துன் வவுனியா மாவட்டத் தலைவருமான செல்வநாயகம் ஆனந்தவர்ணன் (அரவிந்தன்) மற்றும் கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக நீதிமன்றில் முற்படுத்தப்படாமல் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் மூதூரைச் சேரந்த எஸ்.சுதாகரன் ஆகிய இருவரையும் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் இன்று கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர். இதன்போது தனது விடுதலையை வலியுறுத்தி கடந்த இரண்டு […]

தமிழரசுக் கட்சியின் எதிர்காலத்தை மக்கள் மன்றத்திடம் கையளிக்கிறேன் – சிறீதரன் எம்.பி பிரகடனம்….!!

இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், அதன் எதிர்காலத் தலைமைத்துவத்தையும் மக்கள் மன்றத்தின் முன் கையளித்து, தமிழ்த்தேசிய மே நாளன்று புரட்சிகர அரசியல் பயணமாக எனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வெளிப்படுத்தியுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 38 தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்போடும், ஆயிரக்கணக்கான பொதுமக்களின் பங்கேற்போடும் கிளிநொச்சியில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற தமிழ்த்தேசிய மே நாள் நிகழ்வுகளை ஒழுங்கமைத்து, அந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மே நாள் உரையில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது. கட்சியின் […]

எரிக் சொல்ஹெய்ம் யாழ்ப்பாணத்தில் சிறீதரன் எம்பியுடன் சந்திப்பு!

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் செய்த எரிக் சொல்ஹெய்ம் சிறீதரன் எம்பியை சந்தித்து சமகால அரசியல் பொருளாதார நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடினார்

திருவள்ளுவர் வித்தியாலயத்திற்கு குடிநீர் வசதி…!!

அடிப்படை உட்கட்டுமான வசதிகள் அற்ற நிலையில் இயங்கிவரும் கிளி/மலையாளபுரம் திருவள்ளுவர் ஆரம்பப் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர்க் கிணறும் அதனுடன் இணைந்த குடிநீர் வழங்கல் கட்டமைப்பும் இன்றையதினம் (23) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் மாணவர்களின் பயன்பாட்டுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இப்பாடசாலையில் நீண்டகாலமாக நிலவிவந்த குடிநீர்த்தேவையை நிவர்த்திசெய்யும் நோக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கோரிக்கைக்கு அமைவாக, நியூசிலாந்தில் வசிக்கும் அரியதாஸ் செல்வதாஸ் எனும் நன்கொடையாளரின் நிதிப்பங்களிப்பில், அவரது தாயாரான அமரர்.மேரிரெஜினா அரியதாஸ் ஞாபகார்த்தமாக இக் குடிநீர்க்கிணறு அமைக்கப்பட்டு இன்றையதினம் […]

வடக்கில் 9543 ஏக்கர் காணி படையினரால் அபகரிப்பு : விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை…!

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் முப்படைகள், பொலிசார் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில், பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாகத் திரட்ட முடிந்த தகவல்களைக் கொண்டு, தன்னால் தயாரிக்கப்பட்ட விவரண அறிக்கையை சபாபீடத்திற்;கு சமர்ப்பித்து இன்றையதினம் (18) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். […]