வடக்கு கிழக்கிலே தமிழர்கள் இன்றும் அச்சுறுத்தலோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்..

விடுதலைப் புலிகளை மீளவும் உருவாக்குகின்றார்கள் என்கின்ற போர்வையில் கைது செய்வதும். தமிழ் இளைஞர் யுவதிகளையும் தொடர்ச்சியாக இலங்கையினுடைய புலனாய்வுத் துறையினர் விசாரணைகள் மேற்கொள்வதும் வடக்கு கிழக்கிலே தமிழர்கள் இன்றும் அச்சுறுத்தலோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு சிறந்த உதாரணம்.

ஆகவே தமிழர்கள் எதைச் செய்தாலும் எதை பேசினாலும் சிங்களவர்களுடைய பார்வையில் அது புலிகளைப் போன்றே காட்சியளிக்கின்றது.

ஆகவே இவற்றிலிருந்து சிங்கள பேரினவாதிகள் விடுபட வேண்டுமாக இருந்தால் விடுதலைப்புலிகள் ஏன் தோற்றம் பெற்றார்கள் என்பதை சரியான முறையில் ஆய்வு செய்து அதற்கான தீர்வினை கண்டறிதல் வேண்டும்.

நீங்கள் தேவையில்லாமல் அச்சப்பட வேண்டிய அவசியம் கிடையாது அதேபோன்று பொருளாதாரத்திலும் இந்த நாட்டை கட்டி எழுப்பி சிறந்த ஒரு இலங்கை தீவாக மாற்றி அமைக்க முடியும் ஆகவே இந்த நாட்டினுடைய இன்றைய நிலைக்கு யார் காரணம்? இலங்கைக்கு பின்னர் விடுதலை அடைந்த நாடுகள் தங்களை பொருளாதார ரீதியாக மிகப் பலமாக புடம் போட்டு இருக்கின்றார்கள் அப்படி என்றால் இலங்கை தீவில் இதுவரையிலும் பொருளாதாரம் தன்னிறைவு பெரவில்லை என்பதற்கு இந்த நாட்டினுடைய இனப்பிரச்சனையே காரணமாக இருக்கின்றது

ஆகவே இலங்கை தீவு ஒரு பள்ளின மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு தீர்வு ஆகவே இங்கு இருக்கின்ற அனைத்து இன மக்களுக்கும் சம உரித்து வழங்கப்பட வேண்டும் அனைத்து மதங்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் இவற்றை செய்யாமல் ஒருபோதும் இலங்கையை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல முடியாது இவற்றை நீங்கள் புரிந்தும் புரியாதது போல் நடித்துக் கொண்டு மீண்டும் மீண்டும் சிறுபான்மை இனங்களை நசுக்குவதன் ஊடாக தொடர் விசாரணைகள் ஊடாக நீங்கள் எதையுமே சாதிக்க முடியாது

மீண்டும் இந்த நாடு அழிவின் பாதையை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது ஆகவே உங்களிடத்தில் இருக்கின்ற இனவாதத்தையும் மதவாதத்தையும் தூக்கி எறிந்து விட்டு நாங்கள் அனைவரும் இந்த இலங்கை தீவில் சம உரித்தோடு வாழுகின்ற இலங்கை திருநாட்டினுடைய மனிதர்கள் என்கின்ற ஒற்றை வட்டத்துக்குள் ஒன்றிணைய வேண்டும் அதற்கு இனப்பிரச்சனை தீர்க்கப்பட்டு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

சிறப்புச் செய்திகள்