March 28, 2026

அன்னை பூபதி அவர்களின் பத்தாம் நாள் நினைவேந்தல்!

ஈழத் தமிழ் மக்களின் விடியலுக்காகவும், நீதிக்காகவும் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாகத்தாய் அன்னை பூபதி அம்மா அவர்களின் பத்தாம் நாள் நினைவேந்தல் நிகழ்வானது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் காரியாலயமான அறிவகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

​குறித்த அஞ்சலி நிகழ்வில்,  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பிரதேச சபைகளின் கௌரவ உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.