இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடல், கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் காரியாலயமான ‘அறிவகத்தில்’ இன்றைய தினம் நடைபெற்றது.

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும், பிரதேசங்களில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கௌரவ உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Post Views: 10