April 6, 2026

சமகால அரசியல் நிலைமை தொடர்பான கலந்துரையாடல்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் நிருவாகக் கூட்டமும், சமகால அரசியல் கலந்தாய்வும் நேற்று முன்தினம்(04) கட்சியின் மாவட்டப் பணிமனையான அறிவகத்தில் நடைபெற்றது.

​அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த தியாகத்தாய் அன்னை பூபதி அம்மா அவர்களின் நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வினைத் தொடர்ந்து, சமகால அரசியல் நிலவரங்கள் குறித்தும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும் ஏனைய பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

​கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தலைவரும், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கட்சியின் மாவட்டக் கிளைச் செயலாளர் வீரபாகு விஜயகுமார், கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், பூநகரிப் பிரதேச சபையின் உப தவிசாளர் குலவீரசிங்கம் குணலட்சுமி மற்றும் மாவட்டக் கிளை நிருவாக உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.