புன்னைநீராவி விளையாட்டுக் கழக வீரர்களைச் சந்தித்த சிறீதரன் எம்.பி!

புன்னைநீராவி விளையாட்டுக்கழக நிர்வாகத்தினரின் அழைப்பின் பேரில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கும், கழக வீரர்கள் மற்றும் பிரதேச இளைஞர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது.

​இதன்போது, அபிவிருத்திப் பணிகள் மற்றும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பின் சமகால நிலவரங்கள் உள்ளிட்ட ஆக்கபூர்வமான விடயங்கள் குறித்து ஆழமாகக் கலந்துரையாடப்பட்டது.

​இதன்போது, கரைச்சிப் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் (புன்னைநீராவி வட்டாரம்) செல்லத்துரை நிமலகாந், வட்டார அமைப்பாளர் திரு.முரளி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

சிறப்புச் செய்திகள்