வடமராட்சியில் நடைபெற்ற சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு!

தாயகக் கலைஞர் எஸ்.ஜி. சாந்தன் அவர்களின் நினைவாக நடைபெற்ற ‘காலக்குரல்’ மாபெரும் பாடல் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவி தன்ஷிகா அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் வடமராட்சி மண்ணில் சிறப்பாக நடைபெற்றது.

​உடுத்துறை மண்ணின் மைந்தனும், கிளிநொச்சி மாவட்ட வர்த்தக சங்கத் தலைவருமான திரு. இளையதம்பி விஜயசிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்துகொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

​உடுத்துறை வடக்கு பாரதி விளையாட்டுக்கழக மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமராட்சி கிழக்கு பங்குத்தந்தை வணக்கத்துக்குரிய வசந்தன் அடிகளார், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கிளிநொச்சி மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் இளையதம்பி விஜயசிங்கம், வடமராட்சி கிழக்கு பிரதேச சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், கழக வீரர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு மாணவிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

சிறப்புச் செய்திகள்