யாழ் வடமராட்சி, அண்ணா சிலையடி இளைஞர் விளையாட்டுக்கழகம் நடாத்திய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி அண்மையில் (25.04.2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அண்ணா சிலையடி வள்ளுவர் சனசமூக நிலையத்தின் ஆதரவுடன், புலம்பெயர் உறவுகள் மற்றும் கிராமவாசிகளின் நிதிப் பங்களிப்பில் இந்நிகழ்வு சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

அண்ணா சிலையடி இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் திரு. அ. குணசேகரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் குமாரசாமி சுரேந்திரன், பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் வடமராட்சிக்கான இணைப்பாளர் திரு. அருண்குமார், பாடசாலை அதிபர்கள், கிராம அலுவலர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
