சோரன்பற்று சரஸ்வதி சனசமூக நிலைய அடிக்கல் நாட்டு விழா!

சோரன்பற்று, சரஸ்வதி சனசமூக நிலைய அடிக்கல் நாட்டு விழா அண்மையில் (26.04.2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

​இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து கொண்டு, சனசமூக நிலையத்திற்கான அடிக்கல்லினை நாட்டினார்.

​சரஸ்வதி சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. கைலாயபிள்ளை சிந்துஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், கமநல சேவைத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் திரு. பாலசிங்கம் தேவரதன் மற்றும் சோரன்பற்று கிராம அலுவலர் திருமதி அருள்பிரகாஸ் சுபாசினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்புச் செய்திகள்