கவிஞர் தனுசா மகேந்திரரத்தினம் அவர்களின் “பெண் எனும் சுயம்பு” கவிதை நூல் வெளியீட்டு விழா அண்மைய தினம்(2026/05/01) கிளிநொச்சியில் சிறப்புற நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு, கவிதை நூலினையும் வெளியீடு செய்து வைத்தார்.

சிறகுகள் முளைத்த சொற்களோடும், சிந்தனை நெறிக்கும் வரிகளோடும், பெண்மையின் வலியையும் வாழ்வியலையும் பேசும் சிறந்த நூலாக இந் நூல் அமைந்தமை சிறப்புக்குரியது.

கிளிநொச்சி K.K. மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கௌரவ விருந்தினர்களாக, மாயவனூர் கிராம அலுவலர் திரு. சத்தியநாதன், கவிஞர் வன்னியூர் வரன் மற்றும் வவுனியா பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. தி. சிவநேந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post Views: 7