பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களுக்கு நிதியுதவி!

​சுவிஸ்சர்லாந்து வாழ் வர்த்தகரின் நிதிப் பங்களிப்பில்,  பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அடிகளார் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

​இந்நிகழ்வில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்துகொண்டு, யாழ். ஊர்காவற்றுறை புனித அந்தோணியார் கல்லூரியிலிருந்து 2025 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை மூலம் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான 13 மாணவர்களுக்கான நிதி அன்பளிப்பை வழங்கினார்.

​இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், “யுத்தத்தினால் நலிவடைந்துள்ள நாம், உலக அரங்கில் சாதனையாளர்களாக உருவெடுப்பதற்கு கல்வியே முதன்மையான வழியாகும்” என வலியுறுத்தினார்.

கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஊர்காவற்றுறை பிரதேச சபையின் உப தவிசாளர் செபஸ்தியான் பிள்ளை லெனின் ரஞ்சித் அவர்களும், ஊர்காவற்றுறை சென் மேரிஸ் பெண்கள் கல்லூரியின் அதிபர், அருட்சகோதரி ரஞ்சினி அவர்களும்,  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் ஊர்காவற்றுறைத் தொகுதிக்கான இணைப்பாளர் திரு. கனகையா அவர்களும், கட்சியின் செயற்பாட்டாளர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சிறப்புச் செய்திகள்