யாழ். பல்கலைக்கழக வணிகத்துறையின் முதலாவது பேராசிரியர் கந்தையா தேவராஜா அவர்களின் பவள விழா அண்மையில் யாழ். இணுவில், நடராசசேகரப் பிள்ளையார் கோயில் வீதியில் உள்ள விசேட மண்டபத்தில் அண்மையில்(2026/05/24) நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்துகொண்டு, “தேவாமிர்தம்- 4” எனும் பவளவிழா மலரை வெளியிட்டு வைத்து, வாழ்த்துரை வழங்கினார்.
இதன்போது, கல்வித்துறையிலும், சமூகப் பணியிலும், பண்பாட்டு வளர்ச்சியிலும், மனிதநேயச் சேவைகளிலும் பல தசாப்தங்களாக அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் பவள விழா நாயகனின் அளப்பரிய சேவைகளைப் பாராட்டி, இணுவை மக்களால் “சமூகப்பணிவித்தகர்” என்னும் உயரிய கௌரவப் பட்டமும் வழங்கப்பட்டது.

பவளவிழாக் குழுவின் தலைவர் திரு. க. கனகராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் திருமிகு. நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் வாழ்நாள் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை, வலம்புரிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு. N. விஜயசுந்தரம், வவுனியாப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் திரு. மோகனதாஸ் மற்றும் பேராசிரியர் சண்முகதாஸ் தம்பதியினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.