யாழ் சிறையில் உள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனை நேரில் சந்தித்தார் சிறீதரன் எம்.பி!

எழுச்சிப் பாடல் பாடி, அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் கணேஸ்குமார் சங்கீத்சனை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் யாழ்ப்பாண சிறைச்சாலைக்குச் சென்று நேரில் பார்வையிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எழுச்சிப் பாடல்களைப் பாடிப் பகிர்ந்த குற்றச்சாட்டின் கீழ், கிளிநொச்சியைச் சேர்ந்த சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீத்சன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு நேரில் சென்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகரைச் சந்தித்து கலந்துரையாடியதுடன், அவருக்கு நம்பிக்கையூட்டியுள்ளார்.

சிறப்புச் செய்திகள்