ஏழாவது உலகத் திருக்குறள் மாநாடு இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது!

புனித ஜோசப் பல்கலைக்கழகம், பெங்களூரு திருவள்ளுவர் சங்கம், தாய்மொழிக் கூட்டமைப்பு இணைந்து நடத்திய ஏழாவது உலகத் திருக்குறள் மாநாடு, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு நகரில் உள்ள புனித ஜோசப் பல்கலைக்கழகத்தில் பெங்களூரு திருவள்ளுவர் சங்கம் மற்றும் கர்நாடக மாநில தாய்மொழிக் கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைவர் முனைவர் எஸ். டி. குமார் தலைமையில் நேற்று முந்தினம் தினம் நடைபெற்றது.

​இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் வைத்தியர் இளையதம்பி சிறீநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

​திருக்குறள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியீடு செய்யப்பட்டதுடன், மொழிபெயர்க்கப்பட்ட பதிப்பின் முதற் பிரதியினை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டனர்.

திருக்குறள் மாநாட்டினை, புனித ஜோசப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அருட்திரு விக்டர் லோபா, வைத்தியர் அருள்மணி, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் மேனாள் இயக்குநர் பத்மஸ்ரீ முனைவர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோரு மங்கள விழக்கேற்றி விழாவை தொடக்கிவைத்தனர்.

​நிகழ்வில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், கலந்து சிறப்பித்த விருந்தினர்களுக்கு மதிப்பளிப்பு நிகழ்வும் நடைபெற்றது.

​இந்நிகழ்வில், பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன், துறை சார்ந்த அறிஞர்கள், ஊடக நண்பர்கள், கட்டுரை ஆய்வாளர்கள், பல்வேறு மாநில மற்றும் நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள், விஞ்ஞானிகள், எம். ஜி. ஆர் மணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

சிறப்புச் செய்திகள்