யாழ். பல்கலையின் துணைவேந்தராகப் பதவியேற்றுள்ள பேராசிரியர் வேல்நம்பி அவர்களின் பாராட்டு நிகழ்வில் சிறீதரன் எம்.பி!

​யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பத்தாவது துணைவேந்தராகப் பதவியேற்றுள்ள சிரேஷ்ட இருக்கைப் பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி அவர்களுக்கு, புதுவை மண்ணில் மேற்கொள்ளப்பட்ட பாராட்டு நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்துத் தெரிவித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள்.

சமகால அரசியல் நிலைமை தொடர்பான கலந்துரையாடல்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் நிருவாகக் கூட்டமும், சமகால அரசியல் கலந்தாய்வும் நேற்று முன்தினம்(04) கட்சியின் மாவட்டப் பணிமனையான அறிவகத்தில் நடைபெற்றது. ​அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த தியாகத்தாய் அன்னை பூபதி அம்மா அவர்களின் நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வினைத் தொடர்ந்து, சமகால அரசியல் நிலவரங்கள் குறித்தும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும் ஏனைய பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. ​கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தலைவரும், கௌரவ நாடாளுமன்ற […]

​கிளிநொச்சி வர்த்தக சங்கத்தின் சாதனையாளர் மதிப்பளிப்பு விழா!

“மாணவர்களே! எப்போதும் உங்கள் வாழ்விற்கென உயரிய இலக்குகளை நிர்ணயித்து அதனை நோக்கி உறுதியுடன் நகருங்கள். உங்களை நீங்கள் முழுமையாக நம்புங்கள். ஒரு மனிதன் தன்னையும் தன் திறமையையும் நம்பத் தொடங்கிவிட்டால், எத்தகைய சக்தியாலும் அவனையும், அவன் சார்ந்த மண்ணையும் அசைத்துப் பார்க்க முடியாது,” என கிளிநொச்சி நகர வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற, உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியிலும் மாவட்ட ரீதியிலும் முதலிடம் பெற்ற சாதனையாளர்களை மதிப்பளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே […]

முக்கொம்பன் மண்ணுக்குப் பெருமை சேர்த்த இசைப்பிரியா: நேரில் சென்று வாழ்த்திய சிறீதரன் எம்.பி….!

​அண்மையில் வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றில், கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று கிளி/முக்கொம்பன் மகா வித்தியாலய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்த,  மாணவி விஜயரூபன் இசைப்பிரியா அவர்களுக்கு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நேரில் சென்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். ​இதன்போது கிளி/முக்கொம்பன் மகா வித்தியாலய அதிபர் திரு.இராசரத்தினம் அரவிந்தன் அவர்களும்,  பூநகரிப் பிரதேச சபையின் கௌரவ உப தவிசாளர்( நல்லூர் வட்டாரம்) திருமதி குலவீரசிங்கம் […]

பச்சிலைப்பள்ளியில் காணி சுவீகரிப்புக்கு எதிராகப் பாரிய போராட்டம்: நில அளவை நடவடிக்கை கைவிடப்பட்டது!

​கிளிநொச்சி மாவட்டம், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஊர்வணிக்கன்பற்று கிராமத்தில், இராணுவத் தேவைக்காக முன்னெடுக்கப்படவிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக இன்று (02) காலை பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மக்களின் பலத்த எதிர்ப்பினைத் தொடர்ந்து, திட்டமிடப்பட்டிருந்த நில அளவை நடவடிக்கை தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. ​இலங்கை இராணுவத்தின் 4 ஆவது பட்டாலியன் படைப்பிரிவின், மின் மற்றும் இயந்திரப் பொறியியல் படையணி அமைப்பதற்காக 25.73 ஏக்கர் தனியார் காணிகளைச் சுவீகரிக்கும் நோக்குடன் இந்த நில அளவை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அரசாங்க […]

சந்தனம் சண்முகராசாவின் (வாசு மாஸ்டர்) இறுதி சடங்கில் சிறீதரன் எம்.பி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது தாக்குதல் தளபதி லெப்டினன்ட் சீலன் (லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி) அவர்களின் மைத்துனரும், தமிழீழத் தேசியத் தலைவரின் மெய்ப்பாதுகாவலராகச் செயற்பட்டவருமான சந்தனம் சண்முகராசா (வாசு மாஸ்டர்) அவர்களின் இறுதிச்சடங்கு திருகோணமலை, ஆத்திமோட்டையில் நேற்றையதினம்(31) நடைபெற்றது. ​இதன்போது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

திருமலையில் ஆன்மீகத் தலைவர்களுடனான சந்திப்பு!

​திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர், நேற்றைய தினம்  திருகோணமலை மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் (Rt. Rev. Dr. Christian Noel Emmanuel) ஆண்டகை மற்றும் தென்கயிலை ஆதீனத்தின் முதற்குரு தவத்திரு அகத்தியர் அடிகளார் ஆகியோரைச் சந்தித்து   சமகால அரசியல் நிலவரங்கள் குறித்துக் கலந்துரையாடினர். ​திருகோணமலை மறைமாவட்ட ஆயர் இல்லம் மற்றும் கன்னியா, […]

வரலாற்றுப் பெருமை தேடித்தந்த மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்திய சிறீதரன் எம்.பி!

​நேற்றைய தினம் வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி, அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் முதலிடம் பெற்ற செல்வன் தெய்வேந்திரன் திருக்குமரன், கிளிநொச்சி மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் முதலிடம் பெற்ற செல்வன் ஆனந்த் கிருசோந் மற்றும் வர்த்தகப் பிரிவில் முதலிடம் பெற்ற செல்வி கமலநாதன் மதுமினி ஆகிய மாணவச் செல்வங்களை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்றைய தினம் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நேரில் சந்தித்துத் தனது வாழ்த்துகளைத் […]

சிறீதரன் எம்.பியின் ஏற்பாட்டில் பாடசாலைக்கு ஒலியமைப்புச் சாதனங்கள் கையளிப்பு!

யாழ்ப்பாணம், கரவெட்டி சரஸ்வதி வித்தியாலயத்திற்கான ஒலியமைப்புச் சாதனங்கள் வழங்கும் நிகழ்வு அண்மைய தினம் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. ​கனடா, மொன்றியல் வாழ் தமிழ் தேசியத்திற்கான வேர்கள் அமையத்தின் நிதி அனுசரணையில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களினால் குறித்த ஒலியமைப்புச் சாதனங்கள்  வழங்கிவைக்கப்பட்டன. ​பாடசாலையின் முதல்வர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுடன், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் […]

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடல்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடல், கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் காரியாலயமான ‘அறிவகத்தில்’ இன்றைய தினம் நடைபெற்றது. ​​மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும், பிரதேசங்களில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. ​இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கௌரவ உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அன்னை பூபதி அவர்களின் பத்தாம் நாள் நினைவேந்தல்!

ஈழத் தமிழ் மக்களின் விடியலுக்காகவும், நீதிக்காகவும் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாகத்தாய் அன்னை பூபதி அம்மா அவர்களின் பத்தாம் நாள் நினைவேந்தல் நிகழ்வானது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் காரியாலயமான அறிவகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. ​குறித்த அஞ்சலி நிகழ்வில்,  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பிரதேச சபைகளின் கௌரவ உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: மூடப்பட்ட புகையிரதக் கடவைகளைத் திறக்க நடவடிக்கை!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று( 27) யாழ் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. ​குறித்த கலந்துரையாடலில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பங்கேற்றதுடன், பல்வேறு விடயங்கள் தொடர்பில் துறை சார்ந்தவர்களுடன் கலந்துரையாடினார். அத்துடன், யாழ்குடாநாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பான திட்ட முன்மொழிவுகளையும் சபைக்கு வழங்கியிருந்தார். ​குறிப்பாக, “யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரவுண் வீதி முதலாம் ஒழுங்கை – அன்னசத்திர முதலாம் ஒழுங்கைப் பகுதியில் மூடப்பட்டுள்ள […]