யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை தொல்லியல் கண்காட்சி ஆரம்பம்!

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை தொல்லியல் மையத்தில் நடைபெறும் சிறப்பு தொல்லியல் கண்காட்சி நேற்று பொதுமக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2026 ஜூலை 2 ஆம் திகதி முதல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சிவரூபி சயிதரன் மற்றும் களனி பல்கலைக்கழக தொல்லியல் பட்டப்பின் படிப்புக்கள் நிறுவனத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோரின் இணைத் தலைமையில் சிறப்பு தொல்லியல் அகழாய்வுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு கேரள பல்கலைக்கழக தொல்லியல் துறையும் பங்களிப்பு வழங்கி வருகிறது. வட இலங்கையின் ஆரம்ப […]

பூநகரியில் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் காற்றாலைத் திட்டம்: பாதிக்கப்படும் பகுதிகளை நேரடியாகப் பார்வையிட்ட சிறீதரன் எம்.பி!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள், பூநகரிப் பகுதியில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து மேற்கொள்ளப்படவுள்ள காற்றாலைத் திட்டத்திற்காகக் கிராஞ்சியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன், காணி உரிமையாளர்களுடனும் கலந்துரையாடினார்.” பூநகரி பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் காற்றாலைத் திட்டத்தை அமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இத்திட்டத்தினால் பயன்தரும் நிலையிலுள்ள 5000-க்கும் அதிகமான தென்னை மரங்கள் அழிக்கப்படுவதோடு, அதனை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களின் வாழ்க்கைத் தரமும் முற்றுமுழுதாகப் பாதிக்கப்படும். கள […]

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மேனாள் தலைவர் மாவை சேனாதிராசாவின் உருவச் சிலைக்கு சிறீதரன் எம்பி அஞ்சலி!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மேனாள் தலைவரும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் மாவை சோ. சேனாதிராசா அவர்களின் உருவச் சிலைக்கு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நேற்றைய தினம் அஞ்சலி செலுத்தினார். ​இதன்போது, கட்சியின் மூத்த தலைவர் கனகசபாபதி, சேனாதிராசா கலையமுதன், கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட வாலிப முன்னணித் தலைவர் பிருந்தாபன், கௌரவ உறுப்பினர் சபேசன், சிவஞானம் சிறீதரன் அவர்களின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் செல்வன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டாவது கடற்றொழில் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ​குறித்த கலந்துரையாடலில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பங்கேற்றதுடன், பல்வேறு விடயங்கள் தொடர்பில் துறை சார்ந்தவர்களுடன் கலந்துரையாடியதோடு, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் பல விடயங்களை முன்வைத்திருந்தார். ​குறிப்பாக, தட்டுவன்கொட்டி பகுதியில் மக்களின் வாழ்வாதாரக் காணிகள் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் உரிய தீர்வினை வழங்குமாறு […]

” தங்கத் தமிழன் ” கலாநிதி சங்கரன் தங்கராசா அவர்களின் சேவை நலன் பாராட்டு விழாவும் நூல் வெளியீடும்!

நவ சனசமூக நிலையத்தின் நிலமும், புலமும் இணைந்து நடத்திய கலாநிதி சங்கரன் தங்கராசா அவர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. ​இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து கொண்டார். இந் நிகழ்வில், சேவை நலன் பாராட்டு விழா நாயகனின் வாழ்வியல் சிறப்பையும் சமூக சேவையையும் மதிப்பளிக்கும் விதமாக “தங்கத் தமிழ்” நூல் வெளியீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, வாழ்த்துரையினை நிகழ்த்திய நாடாளுமன்ற உறுப்பினர் […]

மட்டக்களப்பில், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் “வரலாற்றின் வேர்கள்” விருது வழங்கும் நிகழ்வும் மாநாடும் சிறப்புற நடைபெற்றது!

​”இனத்திற்காக உழைத்தவரை இன்னலின்றி வாழ வைப்போம்” எனும் தொனிப்பொருளில், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் “சமகால அரசியலும் போராளிகளின் வகிபாகமும், வரலாற்றின் வேர்கள்” விருது வழங்கும் நிகழ்வும் அண்மையில் சிறப்பாக நடைபெற்றன. ​இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்துகொண்டார். ​இந்நிகழ்வின் போது, படுகொலை செய்யப்பட்ட மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம், மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு, மூத்த ஊடகவியலாளர்களான மாமனிதர் தராகி சிவராம், நாட்டுப்பற்றாளர் ஐ. நடேசன், […]

ஜனாதிபதி சாரணர் விருது பெற்றவர்களுக்கான கௌரவிப்பு!

​”எதிர்காலத்தில் எமது சமுதாயத்தையும், இந்த மண்ணையும் சரியான பாதையில் வழிநடத்தக்கூடிய துணிவும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட சிறந்த தலைவர்களாக நீங்கள் மிளிர வேண்டும். நேர்மையும் அநீதிக்கெதிரான தைரியமும் கொண்டு, எமது தமிழ்த் தேசிய இனத்தின் அடையாளமாகவும், எதிர்காலத் தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவும் நீங்கள் உயர வேண்டும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் சாரணத் தலைவர்களிடம் வலியுறுத்தினார். ​இலங்கை சாரணர் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், கிளிநொச்சி சாரணர் மாவட்டத்திலிருந்து, ஜனாதிபதி […]

தமிழரின் பூர்வீக நிலங்களை உடனே விடுவியுங்கள்: நாடாளுமன்றத்தில் சிறீதரன் எம்.பி. முழக்கம் (VIDEO)

கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, இன்றைய தினம் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மிக முக்கியமாக மட்டக்களப்பு மாவட்டத்தினுடைய மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை என்பது காலங்காலமாக தமிழ் கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களுடைய சொந்த இடமாக, தாங்கள் அந்த இடங்களிலே கால்நடைகளை வளர்த்து பயன்களை பெற்று வந்தார்கள். அவர்களுடைய ஏராளமான கால்நடைகள் அந்த பகுதியிலே அத்துமீறி சோளச் செய்கை, பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்ற பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த சிலரால் அவர்களுடைய மாடுகள் கொல்லப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக இப்பொழுது கடந்த […]

“ஊர் கூடி உண்டு மகிழ்வோம்” விளையாட்டுப் பெருவிழாவும் “மண்ணின் மகிமை” இறுவட்டு வெளியீடும்!

அமரர் சிவலோகநாதன் யோகேஸ்வரி அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவை முன்னிட்டு, புனிதம் அறக்கட்டளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட “ஊர் கூடி உண்டு மகிழ்வோம்” விளையாட்டுப் பெருவிழா அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ​இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்துகொண்டார். ​இந்நிகழ்வை முன்னிட்டு, கண்டாவளை முத்தமிழ் கலாமன்றமும், ஊர் கூடி உண்டு மகிழ்வோம் நிர்வாகமும், ரூபன் விளையாட்டுக் கழகமும் இணைந்து, புனிதம் அறக்கட்டளை நிறுவனத்தின் நிதி அனுசரணையில், கண்டாவளை […]

தமிழினத்தை வழிநடத்தும் தலைவர்களாக மிளிருங்கள்; எதிர்காலத் தலைவர்கள் மத்தியில் சிறீதரன் எம்.பி தெரிவிப்பு!

​நமது உரிமைகளுக்காகவும், சுயமரியாதைக்காகவும் சர்வதேச அரங்கில் ஈழத் தமிழினத்தை நிலைநிறுத்தி, வழிநடத்தக்கூடிய எதிர்காலத் தலைவர்களாக உருவாகவேண்டும் என மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் வலியுறுத்தினார். ​கிளி/ புனித பற்றிமா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் 2026 ஆம் ஆண்டுக்கான மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வின் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். ​”ஒரு தலைவனுக்கு மிக முக்கியத் தேவை ஒழுக்கமும் […]

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 பானைகளில் மாபெரும் பொங்கல் விழா!

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 பானைகளில் மாபெரும் பொங்கல் விழா கடந்த புதன்கிழமை(29) வித்தியாலய முன்றலில் சிறப்பாக நடைபெற்றது. ​இந்நிகழ்வில் நூற்றாண்டு விழாக் காணும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் மேனாள் அதிபரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். ​பாடசாலை சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு, “வித்தியாலய அன்னையின்” முற்றத்தில் கலை மற்றும் கலாச்சார விழுமியங்களோடு சிறப்பாக நடைபெற்றது. இதன் போது 100 பொங்கல் பானைகளில் […]

பலாலி மக்களின் காணி விடுவிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட சிறீதரன் எம்.பி.!

​பலாலி பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள தமது சொந்த நிலங்களை உடனடியாக விடுவித்து, அதில் குடியமர அனுமதிக்குமாறு கோரி அப்பகுதி பொதுமக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் 6-ஆவது வாரமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ​இப்போராட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்துகொண்டார்.