கிளிநொச்சி அரச அதிபரை சந்திப்பு.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு, இன்றையதினம் (01) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. குறிப்பாக, வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இடருதவிகளை வழங்குதல், இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்தல் உள்ளிட்ட அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டிருந்தது. அதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் புனரமைக்கப்பட வேண்டியுள்ள உள்ளக வீதிகளை சீரமைத்தல் குறித்தும், அடுத்த ஆண்டுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சித் […]
அனர்த்த நிலை தொடர்பில் யாழ்.அரச அதிபருடன் சந்திப்பு..!!
யாழ்ப்பாண மாவட்டத்தின் வெள்ளப் பேரிடர்ப் பாதிப்பு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இன்றைய தினம் (30) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான உடனடி உதவிகளை வழங்கல், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மக்கள் இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் […]
இரணைமடு குளத்தின் தற்போதைய நிலை..
இரணைமடு குளத்தின் தற்போதைய நிலை தொடர்பாக நேற்றைய தினம் நேரில் சென்று அவதானித்ததுடன், கிளிநொச்சி பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளரான பொறியியலாளர் திரு.க.கருணாநிதி , மற்றும் கிளிநொச்சி கிழக்கு பிரிவுக்கான நீர்ப்பாசனப் பொறியியலாளர் திரு.பிரகாஸ் ஆகியோரை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்
வடக்கின் வெள்ள அனர்த்தம் : இடர்கால நிலை தொடர்பில் ஆளுநருடன் சந்திப்பு..!!
வடக்கின் வெள்ளப் பேரிடர்ப் பாதிப்பு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இன்றைய தினம் (29) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான உடனடி உதவிகளை வழங்கல், காலநிலைத் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதற்கான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுவிஸ் தூதரக அதிகாரிகளுடன் சந்திப்பு!
இலங்கைக்கான சுவிஸ் தூதரக மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ்ப்பாணத்திலுள்ள சிறீதரன் எம்.பியின் இல்லத்தில் நேற்று முன்தினம் (28) நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, இலங்கையிலிருந்து சுவிஸ் நாட்டிற்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் புகலிடக் கோரிக்கைகள் தொடர்பில் சுவிஸ் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பிலும், இந்த ஆண்டு தமிழ்த்தேசிய மாவீரர் நாள் ஏற்பாடுகள் உள்ளிட்ட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பெரியபரந்தன் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – பெரியபரந்தன் வட்டாரக் கிளையினரின் ஒழுங்கமைப்பில் அந்த வட்டாரத்திற்கு உட்பட்ட மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது
தமிழ் கட்சிகளை தமிழர்கள் நிராகரித்து விட்டார்களா?
மக்கள் ஆணையால் தமிழரசு மீள நிமிரும்..!
எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு மக்கள் வழங்கப்போகும் ஆணைதான், எமது மக்கள் விரும்பும் வகையிலான கட்சியின் மீளெழுச்சிக்கு வித்திடும் என நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்.தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளரான சிவஞானம் சிறீதரன் அவர்களை ஆதரித்து, நேற்றைய தினம் (06) வன்னேரிக்குளம் வட்டாரத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,இதுவரை காலமும் தமிழ் […]
தேசத்தின் தந்தைக்கு புகழ் வணக்கம்..!
ஈழ விடுதலைப் போரின் அறத்தை ஏற்று, தன் இரு பிள்ளைகளை இந்த மண்ணுக்கு உவந்தளித்ததோடு, விடுதலை உணர்வை தன் நெஞ்சகத்திலும் சுமந்து தேசப்பணி ஆற்றிய நாட்டுப்பற்றாளர் அமரர்.நாகலிங்கம் பசுபதி ஐயாவுக்கு எமது புகழ் வணக்கங்கள். கனகாம்பிகை மண்ணின் அடையாள மனிதனான அவர்தம் ஆத்மா அமைதிபெற எனது பிரார்த்தனைகளும். சிவஞானம் சிறீதரன்.நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர்,யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்,கிளிநொச்சி
தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு.!
நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா அவர்கள், கட்சியின் பொதுச்செயலாளர் மருத்துவர்.ப.சத்தியலிங்கம் அவர்களிடம் தேர்தல் விஞ்ஞாபனத்தை கையளித்து, உத்தியோகபூர்வமாக அதனை வெளியீடு செய்து வைத்தார். யாழ்ப்பாணத்திலுள்ள கட்சித் தலைவரது இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், ம.ஆ.சுமந்திரன் மற்றும் வேட்பாளர் இம்மனுவல் ஆனல்ட் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்
வட்டக்கச்சி வட்டாரத்தில், கட்சியின் ஆதரவாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பு
வட்டக்கச்சி வட்டாரத்தில், கட்சியின் ஆதரவாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பு
அறிவகத்தில் நடைபெற்ற விஜயதசமி விழாவும், வித்தியாரம்பமும்.
அறிவகத்தில் நடைபெற்ற விஜயதசமி விழாவும், வித்தியாரம்பமும்.