இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் சந்திப்பு!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உடனான சந்திப்பானது இன்றைய தினம் இடம்பெற்றது இதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 8 பேர் கொண்ட குழுவினர் பங்குபற்றி இருந்தார்கள். இக்கலந்துரையாடலில் குறிப்பாக எமது வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்தி, அதிகாரப்பகிர்வு சமகால அரசியல் நிலவரம் தொடர்பான பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. மேலதிக தகவல் தமிழ் எம்பிக்களை சந்தித்த ஜெய்சங்கர்! வெளியானது கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள்

பிரான்ஸ் பொபினி Bobigny நகரசபை முதலர்ரும் சிறீதரன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு

பிரான்ஸ் பொபினி Bobigny நரகரத்தின் நகரசபை முதலர்வரும் Seine-Saint-Denis மாவட்ட சபையி பிரதித் தலைவரும், வெளிநாட்டு வெளிவிவகாரத்திற்கு பொறுப்பானவருமான திரு.Abdel Sadi அவர்களுக்கும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு Bobigny நகரசபையில் 12/06/2024 நடைபெற்றது. குறித்த சந்திப்பில் இலங்கையில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்காக நீதி மற்றும் இலங்கையில் தமிழர்களு நடைபெற்றுவரும் கட்டமைக்கப்பட இனவழிப்பு மற்றும் நில அபகரிப்புகள், அரசியல் கைதிகளின் விடுதலை இலங்கையிங் தொடர்ந்து நடைபெற்றுவரும் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் பற்றிய […]

வடக்கு கிழக்கிலே தமிழர்கள் இன்றும் அச்சுறுத்தலோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்..

விடுதலைப் புலிகளை மீளவும் உருவாக்குகின்றார்கள் என்கின்ற போர்வையில் கைது செய்வதும். தமிழ் இளைஞர் யுவதிகளையும் தொடர்ச்சியாக இலங்கையினுடைய புலனாய்வுத் துறையினர் விசாரணைகள் மேற்கொள்வதும் வடக்கு கிழக்கிலே தமிழர்கள் இன்றும் அச்சுறுத்தலோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு சிறந்த உதாரணம். ஆகவே தமிழர்கள் எதைச் செய்தாலும் எதை பேசினாலும் சிங்களவர்களுடைய பார்வையில் அது புலிகளைப் போன்றே காட்சியளிக்கின்றது. ஆகவே இவற்றிலிருந்து சிங்கள பேரினவாதிகள் விடுபட வேண்டுமாக இருந்தால் விடுதலைப்புலிகள் ஏன் தோற்றம் பெற்றார்கள் என்பதை சரியான முறையில் ஆய்வு […]

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய சிறீதரன்.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய சிறீதரன் எம்.பி, தாயகத்தில் செயல்வலுமிக்க பொருளாதார கட்டமைப்புகளை உருவாக்குதல், வடக்கு, கிழக்கில் நிலைபேறான முதலீடுகள் மூலம் இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவம் மற்றும் தற்போதைய அரசியல் பொருளாதார களச்சூழல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துரைத்திருந்தார்.

மறைந்த ‘மாமனிதர்” மருத்துவர்.ஜெயகுலராஜா

மறைந்த ‘மாமனிதர்” மருத்துவர்.ஜெயகுலராஜா அவர்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொடி போர்த்தி, புகழ் மரியாதை செலுத்தினார்

மாண்புறு மருத்துவருக்கு புகழ் வணக்கம்…!

ஈழ விடுதலைப் போரின் வீரவரலாற்றில் நிகழ்ந்தேறிய எண்ணிலடங்கா தியாகங்களுக்கும் அர்ப்பணிப்புகளுக்கும் அடையாளம் தந்த பலருள்ளும், தனிப்பெரும் ஆளுமையாய் களப்பணியாற்றிய மருத்துவப் போராளி Dr.ஜெயகுலராஜா மறைந்தார் என்ற செய்தி எங்கள் மனங்களெங்கும் துயரை நிறைத்திருக்கிறது. ஈழத்தமிழர்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராய், எங்கள் அறப்போர் முகிழ்ப்புப் பெற்றிருந்த காலத்தில் மருத்துவர்.ஜெயகுலராஜா அவர்கள் தன் மருத்துவத்தால் மாபெரும் மனிதநேயப் போராளியாக அடையாளம்பெறத் தொடங்கியிருந்தார். 1983 இல், சாவகச்சேரி பொலிஸ் நிலையம் மீதான தாக்குதலில் விழுப்புண் அடைந்த சீலன், குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட […]

கிளிநொச்சி விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான பாரம்பரிய கிளித்தட்டு போட்டி

தமிழரசின் ஏற்பாட்டில் கிளிநொச்சி நிர்வாக மாவட்ட எல்லைக்குள் உள்ள அனைத்து பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான பாரம்பரிய கிளித்தட்டு போட்டித்தொடர் 2024! கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வருகின்ற பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையில் எதிர்வரும் ஆடிப்பிறப்பு தமிழரின் பாரம்பரிய திருநாளாகிய அன்று இறுதிப் போட்டிகள் நடைபெறக்கூடிய வகையில் ஆண் பெண் இருபாலருக்கும் இடையிலான கிளித்தட்டு போட்டிகள் நடைபெற மாவட்ட தமிழரசின் பாரம்பரிய விளையாட்டுகள் செயலணி ஏற்பாடு செய்துள்ளது. தந்தை செல்வா வெற்றிக் கேடயம் மற்றும் […]

பாரதப் பிரதமருக்கு சிறீதரன் எம்.பி வாழ்த்து..!!

நடைபெற்று முடிந்த இந்திய நாடாளுமன்றதுக்கான 18வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கமைய, தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் பாரத தேசத்தின் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வாழ்த்துரைத்துள்ளார். இதுதொடர்பிலான அவரது ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தாங்கள் இந்திய மக்களின் மன உணர்வுகளை வென்றிருப்பதன் பிரதிபலிப்பாகவே மக்களவைத் தேர்தலில் பெற்றிருக்கும் இந்த வெற்றி அமைந்திருக்கிறது. பாரதத்தின் அரசியல், பொருளாதார, சமூக நலன் சார்ந்து தாங்கள் ஆற்றவிருக்கும் பணிகளின் விளிம்பில், ஈழத் தமிழர்களுக்கும் இந்திய தேசத்துக்கும் […]

முப்படையினரின் தேவைக்காக பொது மக்களின் காணிகளை அளவீடு செய்வதை உடனடியாக நிறுத்துக.

முப்படையினரின் தேவைக்காக பொது மக்களின் காணிகளை அளவீடு செய்வதை உடனடியாக நிறுத்துமாறு யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கடும் சீற்றத்துடன் கோரிக்கை விடுத்தார்… முப் படையினரின் தேவைக்காக பொது மக்களின் காணிகளை அளவீடு செய்வதை நிறுத்துமாறுயாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினரால் கோரிக்கை முன்வைத்தார். யாழ்ப்பாண மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸின் பிரசன்னத்துடன் இன்று […]