பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கி வைப்பு!

கனடா, மொன்றியல் வாழ் அன்பரது நிதிப் பங்களிப்பில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்றது.

​இந்நிகழ்வில் உரையாற்றிய வட மாகாண மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா அவர்கள்:
​”கல்வி என்பது ஒரு தனிமனிதனின் வளர்ச்சி மட்டுமல்ல, அது ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கான திறவுகோலாகும். இன்று புலம்பெயர்ந்து கனடா, மொன்றியல் நகரில் வாழ்ந்தாலும், தமது வேர்களை மறக்காது எமது மண்ணின் மாணவர்களின் உயர்கல்விக் கனவுகளுக்கு உரமூட்டும் அந்த உறவுகளின் உயரிய மனப்பாங்கினை நான் பெரிதும் பாராட்டுகிறேன்.

பொருளாதாரச் சவால்கள் நிறைந்த இந்தச் சூழலில், கல்வியைத் தொடரத் தடையாக இருக்கும் நிதிச் சுமைகளைத் தளர்த்தி, மாணவர்களின் கைகளில் நம்பிக்கையை ஏந்தச் செய்யும் இத்தகைய அறப்பணிகள் எமது மாகாணத்தின் கல்வித் தரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கையுண்டு”எனத் தெரிவித்தார்.

​இந்நிகழ்வில், யூட் நிமலதாஸ் அடிகளார், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிறப்புச் செய்திகள்