அறத்திநகர் சாலை விளையாட்டு கழகம் நடத்திய, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான மாபெரும் மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வில், பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்துகொண்டார்.

இன்றைய இளையோர் மத்தியில் அதிகரித்து வரும் போதைப் பழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், அவர்களை நல்வழிப்படுத்தவும் இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகள் சிறந்ததொரு கருவியாக விளங்குகின்றன எனக் குறிப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.

இந்நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் வழக்கறிஞர் சுப்பிரமணியம் சுரேன், உப தவிசாளர், கௌரவ உறுப்பினர்கள், கிராம அலுவலர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


Post Views: 10