நான் இன்றும் தமிழரசுக் கட்சியில் தான் இருக்கின்றேன். என்னை யாரும் கட்சியில் இருந்து கலைக்கவில்லை. கலைத்தால் சேர்ந்து பயணிப்பதா இல்லையா என்று முடிவெடுப்பேன் எனக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கிளிநொச்சி தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டில் சந்திரகுமாருக்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

உருவாக்கப்படும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் கூட்டில் இருக்கும் கட்சிகள் அனைத்தையும் நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா என யாழில் நேற்று(15) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கைய இவ்வாறி கூறிய அவர் மேலும் கூறுகையில் :
இந்த கூட்டில் இருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் ரெலொ ஆகியன ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைபில் இருந்தவர்கள். இன்னொரு கட்சியான இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் எவரும் இறக்கவில்லை. இறந்தவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளே என கூறிய சந்திரகுமாரது கட்சி.
இப்போது தமிழ் தேசியம் பேசினால்தான் வாக்கெடுக்கலாம் என்று எண்ணும் அவர்களுடன் இணைந்து பயணிபது இயலாத ஒன்று.
அந்தவகையில் கிளிநொச்சியில் சந்திரகுமார் அணியோடு இணைந்து அரசியலிலோ தேர்தலிலோ செயற்பட முடியாது.
அதே நேரம் யாழ்ப்பாணத்தில் யாராவது அவர்களுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டால் அதுபற்றி என்னால் ஒன்றும் கூற முடியாது.
ஆனால் கிளிநொச்சியில் அது நடக்காது. இது தொடர்பில் நான் மத்திய குழு கூட்டத்திலும் கூறியிருக்கின்றேன். கட்சியின் தலைவருக்கும் ஏனையோருக்கும் தெளிவாக இது தொடர்பில் தெரியப்படுத்தி இருக்கின்றேன்.
குறிப்பாக ஸ்ரீ ரெலோவை இணைக்கும் போது கூட அதன் ஆபத்து குறித்து சத்தியலிங்கத்துக்கு கூறியிருந்தேன். அதன் விழைவை இன்று கட்சி எதிர்கொண்டுள்ளது.
அதேபோன்றுதான் சந்திரகுமாரும் இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் எவரும் இறக்கவில்லை. இறந்தவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளே என கூறியவர். அதுமட்டுமல்லாது பல பாடசாலைகளின் அதிபர்களை வலுக்கட்டாயமாக இடமாற்றிய ஒருவர். தமிழ் தேசியத்துக்கு எதிராக செயற்பட்ட இவரது வருகையும் எம்மை பாதிக்கும். எனவே இது தொடர்பில் மக்கள் முடிவெடுப்பர் என்றும் கூறினார்.