”தமிழ்நாடு மாநிலத்தின் சமூக நீதித்துறை அமைச்சரும், நீண்டகால அரசியல் செயற்பாட்டாளரும், ஈழத்தமிழ் மக்களுடைய விடுதலையோடு இரண்டறக் கலந்தவருமான மாண்புமிகு அமைச்சர் வன்னி அரசு அவர்களை, அவருடைய அமைச்சு அலுவலகத்தில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

இச்சந்திப்பின்போது, சமூக நீதித்துறை அமைச்சராகத் தனது பணிகளைச் சிறப்பாக ஆற்றிவரும் மாண்புமிகு அமைச்சர் வன்னி அரசு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, சந்திப்பின் நினைவாகப் புத்தகம் ஒன்றையும் வழங்கிவைத்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு C. ஜோசப் விஜய் தலைமையிலான அரசில், சமூக நீதித்துறை அமைச்சராகவும், அக்கட்சியின் மாநில விவகாரங்கள் குறித்த கொள்கைக் குழுவின் அங்கத்தவராகவும் பணியாற்றி வரும் ஒரு மூத்த அரசியல் தலைவராகத் திரு. வன்னி அரசு விளங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.”