தீவுப்பகுதி வீதிகள் புனரமைப்பு: எம்பி சிறீதரனின் கேள்விக்கு நாடாளுமன்றத்தில் அமைச்சர் பதில்!

யாழ்ப்பாணம் தீவுப்பகுதி வீதிப் புனரமைப்பு குறித்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்றையதின்ம்(22) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பிமல் இரத்நாயக்க பதிலளித்துள்ளார். யாழ்ப்பாணம், வேலணைத் துறையிலிருந்து புங்குடுதீவு வரையான 4 கிலோமீட்டர் கடல்வழிக் கூட்டுப்பாதை (Causeway) உள்ளிட்ட வீதி அபிவிருத்திப் பணிகள் எதிர்வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நிறைவு செய்யப்படும் என அமைச்சர் பிமல் இரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் எழுப்பிய வாய்மொழி மூல வினாக்களுக்குப் […]
“நம்பிச் செல்லும் சிறுமிகளுக்கு நேரும் கொடூரம்! மதத்தலைவர்களின் அநாகரிகச் செயல்கள் குறித்து சிறீதரன் எம்.பி காட்டம்!” (VIDEO)

இன்றைய தினம் வழக்கறிஞர் திருமதி கிருணி விஜயசிங்க அவர்களால் கொண்டுவரப்பட்ட பாடசாலை மாணவர்களின், கல்வி அபிவிருத்தி, தொழில் அபிவிருத்தி மற்றும் தனிநபர் சமூக அபிவிருத்தியின் பொருட்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் பயிற்றப்பட்ட உளவள ஆலோசகர் (Student Counselor) ஒருவரை நியமித்தல் என்கிற இந்த பிரேரணை ஒரு காலத்தினுடைய தேவையாக நான் கருதுகிறேன் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (10) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இதனை […]
“தமிழீழ வைப்பக நகைகள் மற்றும் புனர்வாழ்வு கழக நிதியை தமிழ் மக்களிடம் ஒப்படையுங்கள்!” – நாடாளுமன்றத்தில் சி.சிறீதரன் எம்.பி (VIDEO)

இன்றைய நாள், பணத்தூயதாக்கல் சட்டமூலத்தினுடைய நிறைவேற்றத்தை நீங்கள் கொண்டு வர முயற்சிக்கின்ற இந்த நாளிலே, இந்த நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய யுத்தத்தின் பொழுது தமிழீழ தேசம் என்பது ஒரு கட்டமைக்கப்பட்ட நிதி, பொருளாதார, அரசியல் மையப்படுத்தப்பட்ட ஒரு தேசமாக தமிழர்களுடைய நிலப்பகுதிகள் இருந்தது. அந்த காலகட்டங்களில் அவர்களுடைய நிலப்பகுதிகளில் இயங்கிய தமிழீழ வைப்பகத்திலே தமிழர்கள் தங்களுடைய நகைகளை அடகு வைத்திருந்தார்கள். இறுதி யுத்தத்தின் பொழுதும் அந்த நகைகள் அடகிலே இருந்த நகைகளை எடுக்கக்கூடியவர்கள் மீள எடுத்திருந்தார்கள். எடுக்காதவர்களுடைய […]
“தென்னந்தோப்புகளை அழித்து காற்றாலைகளா?” நாடாளுமன்றத்தில் சிறீதரன் எம்.பி (VIDEO)

இன்றைய தினம் வலுசக்தி மற்றும் மின்சாரம் தொடர்பான இந்த விவாதத்தின் பொழுது, மிக முக்கியமாக நாட்டிலே இயற்கையின் வழியிலே நீங்கள் மின்சாரங்களைப் பெறுவதும், ஏற்கனவே இருக்கின்ற நீர் மின்சாரத்தின் ஊடாகவும் நாட்டினுடைய மின்சாரத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருந்தாலும் இப்பொழுதும் கூட சில இடங்களில் இயந்திரங்கள் மூலமாக மின்சாரம் வழங்குகின்ற செயல் திட்டங்கள் நாட்டிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எரிபொருள் தட்டுப்பாடுகள் ஒருபுறம் இருக்க, இயற்கை ரீதியாகக் கிடைக்கின்ற மின்சாரத்தினுடைய தாக்கமும் தரவுகளும் குறைவு என்பதையும் […]
35 ஆண்டுகால நில ஆக்கிரமிப்பும் மீனவர்களின் அவலமும்: நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழ் மக்களின் குரல்! (VIDEO)

மிக முக்கியமாக கடந்த மே மாசம் 27ஆம் தேதி புதன்கிழமை யாழ்ப்பாணம் மாவட்டத்தினுடைய பருத்தித்துறை முனை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு சென்றிருந்தார்கள். அந்த மீனவர்களிலே நான்கு பேர் இதுவரை இன்னும் வீடு திரும்பவில்லை. அரசாங்கத்தினால் அவ்வாறு சென்றவர்களை கொண்டு வருவதற்கான, தேடி கண்டுபிடிப்பதற்கான சரியான நடவடிக்கைகள் உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படவில்லை என்பதையே அந்த பகுதி எங்களுடைய மீனவ சகோதரர்கள் எங்களிடம் முறையிட்டுருக்கிறார்கள் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் […]
“வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம் வெடிக்கும்!” நாடாளுமன்றத்தில் சிறீதரன் எம்.பி (VIDEO)

இன்றைய தினம் அவசர கால சட்டத்தோடு சேர்ந்த வகையில் நீடிப்பு செய்வதற்கான பிரேரணையை ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்டிருக்கிற இந்த சூழலில், இந்த நாட்டிலே பல்வேறுபட்ட துயர நிகழ்வுகளும் துன்பங்களும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக கொண்டுவரப்பட்டிருக்கிற இந்த காலச்சூழல் மிகவும் பயங்கரமானதாக இந்த நாட்டிலே இருக்கின்றது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (09) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் […]